பீகாரில் ஹோலி பண்டிகை ரத்து!

பிப்ரவரி 27, 2018 624

பாட்னா(27 பிப் 2018): 9 மாணவர்கள் விபத்தில் இறந்ததை அடுத்து பீகாரில் இவ்வருட ஹோலி பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 22-ம் தேதி மதியம் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பிரதான சாலையில் இருந்து தாறுமாறாக வந்த கார் ஒன்று பள்ளிக்குள் புகுந்தது. கார் வேகமாக மோதியதில் பல மாணவர்கள் சிக்கி உயிருக்குப் போராடினர்.

உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரில் பள்ளி மாணவர்கள் 9 பேர் இறந்ததால், முதல்வர் நிதிஷ்குமார் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...