லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அவுரங்காபாத் இஸ்லாமிய மாநாடு - வீடியோ!

பிப்ரவரி 27, 2018 846

அவுரங்காபாத்(27 பிப் 2018): மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தப்லீக் இஸ்லாமிய மாநாடு அமைதியாக நடந்து முடிந்தது.

கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய மூன்று நாள் இஸ்லாமிய தப்லீக் மாநாடு திங்கள் கிழமை மாலை நிறைவடைந்தது.

சுமார் ஆறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். பல இஸ்லாமிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

பாதுகாப்புப் பணியில் சுமார் 5000 காவல்துறைனர் ஈடுபடுத்தப்பட்டனர். மஹாராஷ்டிர சிவசேனா அரசு இந்த மாநாட்டிற்கு முழு ஆதரவை அளித்ததோடு தங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டி இந்த மாநாட்டினரிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The three-day Tablighi Ijtema, held at the Limbe Jalgaon village on the Aurangabad-Pune highway, drew lakhs of people from across the nation and some parts of the world on the concluding day on Monday

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...