மொபைல் போன்களில் ரிங் டோனாக திருகுர்ஆன் ஓசையை வைக்க தடை!

பிப்ரவரி 28, 2018 675

புதுடெல்லி(28 பிப் 2018): மொபைல் போன்களில் ரிங் டோனாக திருகுர்ஆன் வரிகளுடன் கூடிய ஓசையை வைக்க இந்தியாவின் தாருல் உலூம் அரபிக் கல்லூரி தடை விதித்துள்ளது.

திருகுர்ஆன் அத்தியாயங்கள் மிகவும் புனிதமானவை அதனை ரிங் டோனாக சிலர் வைத்துள்ளனர். இதற்கு சவூதி அரேபியா ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரி சவூதியின் ஃபத்வாவை வரவேற்றுள்ளது.

அதேபோல இந்திய முஸ்லிம்களும் மொபைல் போன்களில் திருகுர்ஆன் ஓசை வைக்கக்கூடாது என்றும் தாருல் உலூம் இஸ்லாமிய அறிஞர்கள்தெரிவித்துள்ளனர். குறிப்பாக மொபைல்களில் ரிங் வரும்போது குர்ஆன் வசனம் செட் செய்திருந்தால் அதன் ஓசை வரும்போது அதன் அர்த்தம் முழுமையடையாமலேயே கட் செய்யப்படும் மேலும் கழிவறைகளுக்கு மொபைல் போன்கள் கொண்டு செல்லும்போது அங்கேயும் ரிங் வரும்போது குர்ஆன் வசனம் ஒலிக்கும் இவ்வாறு பல அசவுகரியங்கள் இருப்பதால் மிகவும் புனிதமான குர்ஆன் வசனங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் விதமாக இந்த தடை விதிக்கப்படுவதாக தாருல் உலூம் இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...