நஜீப் குறித்து பொய் தகவல் பரப்பிய பாஜக எம்.எல்.ஏ!

பிப்ரவரி 28, 2018 579

புதுடெல்லி(28 பிப் 2018): காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் நஜீப் குறித்து உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ சமூக வலைதளங்களில் பொய்யான தகவலி பரப்பியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பயோடெக்னாலஜி முதுகலை மாணவர் நஜீப் அஹ்மத் அக்டோபர் 15, 2016-ல் மாஹி-மாண்ட்வி விடுதியிலிருந்து மாயமானார். இன்று வரை இவர் என்ன ஆனார் என்பது பற்றி எந்தவித துப்பும் கிடைக்காமல் திணறி வருகிறது சிபிஐ.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மாணவர்களுக்கும், நஜீமுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே நஜீப் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நஜீப் குறித்து பலதடவை பொய்யான தகவல்களை ஏபிவிபி பரப்பி வந்தது. ஆனால் எதற்கும் ஆதாரமில்லை.

தற்போது உத்திர பிரதேச மாநிலம் பதேபூர் பாஜக எம்.எல்.ஏ விக்ரம்சிங் நஜீப் ஐ.எஸ் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவலை பரப்பியுள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...