நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கில் திடீர் திருப்பம் - பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளர் கொலை?

மார்ச் 01, 2018 676

புதுடெல்லி(01 மார்ச் 2018): நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கின் திடீர் திருப்பமாக பஞ்சப் நேஷனல் வங்கி காசாளர் ரோஹித் ஸ்ரீவஸ்தவாவின் உடல் பல்ராம்பூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடி என்ற வைர வியாபாரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்டதோடு வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். வங்கியின் அதிகாரிகள் இந்த மோசடிக்கு துணை போனார்கள் என்ற வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ. அமைப்பு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் லக்னோ நகருக்கு உட்பட்ட பஞ்சாப் தேசிய வங்கியின் பெஹார் கிளையில் தலைமை காசாளராக இருந்தவர் ரோஹித் ஸ்ரீவஸ்தவா (வயது 28). இவரது உடல் பல்ராம்பூர் மாவட்டத்தின் மங்காபூர் சாலையில் அமைந்த கால்வாய் பாலம் ஒன்றின் கீழ் நீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அவரது மரணத்திற்கும் நீரவ் மோடியின் வழக்கிற்கும் ஏதாவது தொடர்பிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், இந்த தகவலை அவரின் குடும்பத்தினருக்கும் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...