கல்லூரி மாணவிகள் இதெல்லாம் அணியக்கூடாதாம்!

மார்ச் 06, 2018 692

ஜெய்ப்பூர் (06 மார்ச் 2018): ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் மாணவர்கள் சட்டை, பேண்ட், ஷூ, பெல்ட் மற்றும் குளிர்காலத்தில் ஸ்வெட்டர் அணியலாம். மாணவிகள் சல்வார், துப்பட்டா, புடவை, ஷூ அல்லது செருப்பு மற்றும் குளிர்காலத்தில் ஸ்வெட்டர் அணியலாம்.

ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் மாணவ- மாணவிகள் ஒரே மாதிரியான எந்த கலரில் சீருடை அணிய வேண்டும் என்பதை மாணவ அமைப்புகளுடன் ஆலோசித்து தீர்மானித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆடைக் கட்டுப்பாடு வி‌ஷயத்தில் பா.ஜனதா அரசு , ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் புகுத்த முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...