நாடாளுமன்றத்தில் அதிமுக திமுக எம்.பிக்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

மார்ச் 06, 2018 785

புதுடெல்லி (06 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் அதிமுக, மற்றும் திமுக எம்.பிக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூ. எம்.பி-க்கள் இணைந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க- திமு.க உள்ளிட்ட எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக எம்.பி-க்கள் வேணுகோபால், குமார், அரி, அருண்மொழிதேவன், சத்தியபாமா உள்ளிட்டோர் நோட்டீசை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...