பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

மார்ச் 06, 2018 545

புதுடெல்லி (06 மார்ச் 2018): பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 6 வது நாளாக அதிகரித்துக் கொண்டு உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் குழப்பம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனம் வைத்திருப்போர் இதில் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 6 வது நாளாக அதிகரித்துள்ளது.

பிராண்டு இல்லாத பெட்ரோல் விலை நேற்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.32 ஆக விற்பனை ஆனது. இன்று 7 பைசா அதிகரித்து 72.39 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.75.07 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையை பொறுத்தவரை, டெல்லியில் ஒரு லிட்டர் நேற்று ரூ.62.89-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ. 62.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.66.31 ஆக இருந்தது. இன்று ரூ.66.39 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...