பேருந்தில் வைத்து மூன்று வயது சிறுமி வன்புணர்வு!

மார்ச் 06, 2018 1061

கொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.

மேற்கு வங்க மாநிலம் மேற்கு கால்வாய் பகுதியில் நேற்று மாலை 5 வயது சிறுவனும், அவனது 3 வயது தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஷேக் முன்னா (45) என்பவன் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, தான் கிளீனராக வேலை செய்யும் பேருந்துக்குள் தூக்கிச் சென்றிருக்கிறான். அங்கு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் அண்ணன் சேக் முன்னாவிடம் கெஞ்சியிருக்கிறார்.

ஆனால் அதனை கண்டுகொள்ளாத சேக் முன்னா , சிறுமியை கொடூரமாக வன்புணர்ந்து விட்டு தப்பி ஓடிவிட்டான். பின்பு சிறுவன் அருகில் உள்ளோரை அழைத்ததும் வந்து பார்த்தபோது சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனை சிறுமியை மீட்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சேக் முன்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...