அடுத்தடுத்து சிலைகள் உடைப்பு - தொடரும் பதற்றம்!

மார்ச் 07, 2018 731

மீரட் (07 மார்ச் 2018): லெனின் மற்றும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து உத்திர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்விக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சி அமைக்கிறது. பாஜக பதவியேற்கும் முன்பே திரிபுராவின் பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.

அதன் விளைவாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, பா.ஜ.க நகரச் செயலாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜகவினர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீஸார் இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேசம் மீரட்டில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...