ஹாதியா திருமணம் செல்லும் - உச்ச நீதிமன்றம் அதிரடி!

மார்ச் 08, 2018 976

புதுடெல்லி (08 மார்ச் 2018): ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த அகிலா என்பவர் முஸ்லிமாக மதம் மாறி ஷபீன் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஷபீன் ஜஹான் மீது லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு சுமத்தி கேரள நீதிமன்றத்தில் ஹாதியா பெற்றோர் அளித்த மனு அளித்தனர். அதன் அடிப்படையில் கேரள உயர் நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஷபீன் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஷபீன் ஜஹான், ஹாதியா திருமணத்தை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி இவர்களுடைய திருமணம் செல்லும் என உத்தரவிட்டது.

மேலும் ஷபீன் ஜஹானிடம் திருமண விவகாரத்தை தவிற்து விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. ஷபீன் ஜஹான் மீது என்.ஐ.ஏ ஐ.எஸ் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே ஹாதியா தன்னுடைய கணவர் ஷஃபீன் ஜஹானை தீவிரவாதியாக சித்தரிக்க தன்னை வற்புறுத்துவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...