உத்திர பிரதேசம் மதரஸாவில் தேசிய புலனாய்வு அமைப்பு திடீர் சோதனை - (VIDEO)

மார்ச் 09, 2018 790

பாந்தா (09 மார்ச் 2018): உத்திர பிரதேசம் பாந்தாவில் உள்ள ஹதூரி மதரஸாவில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் கைதான ஆசிஃப் என்பவர் ஹதூரி மதரஸாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பயின்றுள்ளார். ஆசிஃப் தீவிரவாத தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர். இவர் குறித்த விசாரணைக்கு என்.ஐ.ஏ அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

வியாழன் மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. மதரஸாவில் மாணவர்களுக்கு தீவிரவாத அமப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் மதரஸா ஆசிரியர்களுக்கு என்.ஐ.ஏ சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...