கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்து யுவசேனா பயங்கரவாதி கைது!

மார்ச் 10, 2018 588

பெங்களூரு (10 மார்ச் 2018): பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக இந்து யுவ சேனாவை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப் பட்டுள்ளான்.

கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். உளவுப்பிரிவு ஐ.ஜி பி.கே.சிங். தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும் குற்றவாளிகள் 2 பேரின் 3 உருவங்கள் அடங்கிய புகைப்படங்களை போலீசார் வெளியிட்டும் இதுவரை கொலையில் எந்த துப்பும் துலங்காமல் இருந்து வந்தது.

கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக பிரவீன் குமார் என்பவரை கடந்த மாதம் 18-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவனது பெயர் பிரவீன்குமார் என்பதும், அவன் இந்து யுவசேனா என்ற அமைப்பினைச் சேர்ந்தவன் என்பதும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவனிடம் மேலும் நடத்திய விசாரணையில் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...