முஸ்லிம் பிரச்சாரகர் எம் எம் அக்பருக்கு ஜாமீன்!

மார்ச் 10, 2018 590

திருவனந்தபுரம் (10 மார்ச் 2018): இஸ்லாமிய பிரச்சாரகர் எம்.எம்.அக்பருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சாரகர் எம்.எம்.அக்பர் கைது கடந்த மாதம் ஐதராபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவிலிருந்து ஹைதராபாத் வந்த வேளையில், ஹைதராபாத் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்பு கேரள காவல்துறையில் அவர் ஒப்படைக்கப் பட்டார்.

பீஸ் இன்டெர்நேஷனல் பள்ளியின் உரிமையாளரான எம்.எம்.அக்பர். அவரது பள்ளியில் உள்ள பாட புத்தகங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாட திட்டங்கள் உள்ளதாகக் கூறி கைது செய்யப் பட்டார். இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...