சிங்கப்பூரில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு!

மார்ச் 11, 2018 823

சிங்கப்பூர் (11 மார்ச் 2018): முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கொலைச் சம்பவங்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைவு கூறினார்.

சிங்கப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி, கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார். அப்போது அவரது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலைச் சம்பவங்கள் நினவு கூறப் பட்டன. அப்போது பேசிய ராகுல் காந்தி, "நானும் பிரியங்காவும், எனது தந்தை ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போதும், பாட்டி இந்திரா கொலை செய்யப்பட்ட போதும் பெரும் மனத்துயரைச் சந்தித்ததாகவும் அந்த காலகட்டங்களில் நாங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 15 பேர் எங்கள் காவலுக்கு வருவார்கள், எனது பாட்டி இறப்பதற்கு முன்னர் தானும் எனது தந்தையும் ஒருநாள் கொல்லப்படுவோம் என தன்னிடம் கூறினார்.

எனது பாட்டி கொல்லப்படுவார்கள் என அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து விளையாடியவர்களே என் பாட்டியை கொன்றது சொல்ல முடியாத வருத்தமளித்தது. எனது தந்தையை கொன்றவர்கள் மீது முன்னர் அதிக ஆவேசம் வந்தது. ஆனால், தற்போது அவர்களை, நானும் பிரியங்காவும் மன்னித்துவிட்டோம். இருவரின் கொலைச் சம்பவங்களிலும் யாரையும் வெறுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவெத்துள்ளோம். இருப்பினும் இந்தப் பிரச்சனையில் எனது தனிப்பட்ட முடிவினை தெரிவிக்க முடியாது. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு நான் உடன்பட வேண்டும். பிரபாகரனின் உடலை தொலைக் காட்களில் பார்த்தேன் அது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. ஒருவரை இவ்வளவு கொடுமையாகக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்" என்று உருக்கமாக பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...