எல் கே ஜி கட்டணம் எவ்வளவு தெரியுமா? - கேட்டால் அதிர்வீர்கள்!

மார்ச் 11, 2018 891

பெங்களூரு (11 மார்ச் 2018): எல் கே ஜி படிக்க ரு 2 லட்சம் வரை செலவாவதாக புகைப் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விளக்கக் கட்டணத்துடன் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 2017-18ம் கல்வி ஆண்டுக்கான, கட்டண கையேட்டில், ட்யூசன் ஃபீஸ் என ரூ.39,830 வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ரூ.62,500 வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, எச்சரிக்கை டெபாசிட், ஸ்மார்ட் கிளாஸ், கிறிஸ்துமஸ் ஃபெல்லோஷிப் மதிய உணவு, கட்டிட நிதி என பல்வேறு பிரிவுகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக மொத்தம் கட்டணம் ரூ.202,000 வசூலிக்கப்படுகிறது. இது எல்கேஜிக்குதான்.

பெங்களூரிலுள்ள புகழ்பெற்ற பல பள்ளிகளும் ஏறத்தாழ இதே அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணம் எல்.கே.ஜி படிக்கவா? அல்லது எஞ்சினியரிங் படிக்கவா? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...