அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் புது மணப் பெண் மரணம்!

March 12, 2018

ஐதராபாத் (12 மார்ச் 2018): திருமண நிகழ்ச்சியில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு புது மணப் பெண் மரணமடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் நல்கோன்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் புதுமணப் பெண் காயத்ரி. அவருக்கும் அதே ஊரை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கோவிலுக்கு அழைத்து வரப் பட்டுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடன் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றனர். காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும் அப்போது அதிக சப்தத்துடன் இசை ஒலித்ததால் அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புது மணப் பெண் கல்யாண கொலத்தில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!