சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேவலமான கேள்வி! (வீடியோ)

மார்ச் 12, 2018 770

புதுடெல்லி (12 மார்ச் 2018): சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 6-ம் வகுப்பு தேர்வில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் சிபிஎஸ்இ பிரிவுகளுக்கு என்சிஆர்டி எனப்படும் பாடநூல் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 6-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றுள்ளது. அதில் வர்ணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. அதற்கு 4 விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் என்ற 4 பதில்கள் தரப்பட்டுள்ளன.

இந்தக் கேள்வி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்த கேள்வித்தாள் வேகமாகப் பரவி வருகிறது. 6 ஆம் வகுப்புக்கு அந்தந்த பள்ளிகளே கேள்விகளை தயாரித்துக் கொள்ளலாம் என்ற நிலையில் எந்தப் பள்ளியில் இந்த கேள்வித்தாள் வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...