மும்பையை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி!

மார்ச் 12, 2018

மும்பை (12 மார்ச் 2018): மும்பையை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.

விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வனத்துறை நிலங்களை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆதிவாசிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும், மஹாராஷ்டிராவின் நீரை குஜராத் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ''விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இது குறித்து அவர்களுக்கு எழுத்து பூர்வமாக ஒரு கடிதத்தையும் அளித்துள்ளோம்'' என்று மகாராஷ்டிர மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!