சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் மாயாவதி பங்கேற்பு?

மார்ச் 13, 2018

புதுடெல்லி (13 மார்ச் 2018): டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறும் விருந்தில் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் பங்கேற்கின்றன.

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார்.

இந்த விருந்தில் திமுக சார்பில் மாநிலங்களைவை உறுப்பினர் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பாண்டியோபாத்யாய், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விருந்துக்கு சமாஜவாதி கட்சி தலைவர் மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பங்கேற்பது குறித்து உறுதி செய்யப் படவில்லை.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!