கவுரி லங்கேஷ் கொலையாளி வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்!

மார்ச் 13, 2018 723

பெங்களூரு (13 மார்ச் 2018): எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான இந்து யுவ சேனா பயங்கரவாதி நவீன் குமார் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த கொலை குறித்து பல மாதங்கள் துப்பு துலங்காமல் இருந்த நிலையில் பிப்ரவரி 18-ம் தேதி நவீன் குமாரை, போலீசார் கைது செய்தனர். அவர் துப்பாக்கி வாங்கும் செயலில் ஈடுபட்டதும், அவரிடம் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவனிடம் நடத்திய விசாரனையில், கே.எஸ். பகவான் என்ற எழுத்தாளரையும் அவன் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் கவுரி லங்கேஷ் கொலைத் தொடர்பான மேலும் உண்மைகளைக் கண்டறிய, நவீன் குமாருக்கு உண்மை அறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. இவருக்கு பின்னால் உள்ள சதிக்கும்பல் யார், இவர்களுக்கு ஆயுதம் எங்கிருந்து வருகிறது, இதன் வலைப்பின்னல் என்னவென்று போன்ற தகவல்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் கர்நாடகா உயர்மட்ட போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே எழுத்தாளர்கள் கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கும் கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப் பட்டு வரும் நிலையில் விரைவில் பல உண்மைகள் வெளி வரும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...