இடைத் தேர்தல்: உ.பி மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு!

மார்ச் 14, 2018 933

லக்னோ (14 மார்ச் 2018): உத்திர பிரதேசம் மற்றும் பீகார் இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் கோரக்பூர், புல்பூர் மற்றும் பீகாரின் அரோரியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 11 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குறிப்பாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்ற கோராக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம் கண்டுள்ளது.

உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதால் கோராக்பூர் தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல துணை முதல்வரக பொறுப்பேற்றுள்ள கேசவ் பிரசாத் மவுரியா புல்பூர் தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இருவரும் மேலவை தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் உள்ளனர்.

இந்நிலையில் இருவரின் தொகுதிகளான கோராக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளின் இடைத் தேர்த்லில் பாஜக தோல்வி முகம் கண்டுள்ளது. இது பாகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பிகார் மாநிலம் ரோரியா தொகுதியிலும் பாஜக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கு மிக முக்கிய மாநிலங்களாக கருதப்படும் இரு மாநில இடைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி முகம் கண்டுள்ளமை பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...