மத்திய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம்!

மார்ச் 16, 2018 612

புதுடெல்லி (16 மார்ச் 2018): மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

சமீபத்திய உ.பி, மற்றும் பீகார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் தோல்வியும், சில எம்.பிக்கள் விலகலும் மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இன்று அறிவித்தார். அதனோடு, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அக்கட்சியின் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திராவின் மற்றொரு கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில் சந்திர பாபு நாயுடு கட்சியும் கடிதம் அளித்துள்ளது.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கிடைத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...