பாஜக மீது தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம்:காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு!

மார்ச் 16, 2018 603

புதுடெல்லி (16 மார்ச் 2018): மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சமீபத்திய உ.பி, மற்றும் பீகார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் தோல்வியும், சில எம்.பிக்கள் விலகலும் மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இன்று அறிவித்தார். அதனோடு, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அக்கட்சியின் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது.

வரும் திங்கள் கிழமை கொண்டு வரவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆந்திர மாநில ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...