2000 ரூபாயை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு?

மார்ச் 17, 2018 551

புதுடெல்லி (17 மார்ச் 2018): 2000 ரூபாயை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த, 2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என்று தகவலகள் வெளியாகின.

இதுகுறித்த கேள்விக்கு லோக்சபாவில் பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தற்போது புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 'புதிதாக, 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், ஷிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படும்' என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...