மாட்டுக் கறிக்காக கொலை : பாஜக தலைவர் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மார்ச் 17, 2018 887

ராஞ்சி (17 மார்ச் 2018): மாட்டுக் கறி ஏற்றி சென்றதாக ஒருவர் கொலை செய்யப் பட்ட வழக்கில் முதல் முதலாக 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி, அலீமுத்தின் அன்சாரி என்பவர் அவரது வேனில் மாட்டுக் கறி ஏற்றிச் சென்றதாகக் கூறி அடித்துக் கொலை செய்யப் பட்டார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. போதிய ஆதாரங்கள் இருந்தும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்ட போதும் அவர்களுக்கு தண்டனை வழங்கப் படாமல் இருந்து வந்தது. அவர்கள் மீது கொலை, மற்றும் கொலைக்கான திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அறிவிக்கப் படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...