விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!

மார்ச் 17, 2018 456

புதுடெல்லி (17 மார்ச் 2018): உரங்களை குறைந்த அளவில் பயன் படுத்துமாரு விவசாயிகளை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் முன்னேற்றம் தொடர்பாக இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

"விவசாயிகளுக்காக மத்திய அரசு அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களையும் விதமாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

விவசாயிகளின் தானியங்களுக்கு உற்பத்தி விலையில் இருந்து 1.5 சதவீதம் அடிப்படை ஆதார விலையாக அவர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாநிலங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.

விவசாயிகள் உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். மேலும், எஞ்சிய பயிர்களை எரிக்க வேண்டாம். அவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன், மண்ணின் சத்தும் பாழாகிறது. எண்ணெய் வித்துக்களை தாராளமாக பயிரிடுங்கள். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெயின் அளவை குறைக்க முடியும்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...