உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் மசூதிகளுக்கு செல்ல விருப்பம்!

மார்ச் 17, 2018 929

லக்னோ (17 மார்ச் 2018): மசூதிகளில் இருந்து அழைப்பு விடுக்கப் பட்டால் செல்ல தயாராக உள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலை காட்சி நேர்காணல் ஒன்றின் கேள்விக்கு பதில் அளித்த யோகி ஆதித்ய நாத், " என் ஒரு வருட உத்திர பிரதேச ஆட்சி காலத்தில் நான் பல கோவில்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இதுவரை ஒரு மசூதிக்கும் சென்றதில்லை. எனக்கு அழைப்பு விடுக்கப் பட்டால் மசூதிகளுக்கு செல்வதில் தயக்கம் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் சொந்த தொகுதி உட்பட இரண்டு தொகுதிகளையும் பாஜக இழ்ந்தமை குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...