டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை டாக்டர்கள் சாலை விபத்தில் பலி!

மார்ச் 18, 2018 751

மதுரா (18 மார்ச் 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை டாக்டர்கள் மூன்று பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூன்று டாக்டர்கள் ஒரே காரில் உத்தரப்பிரதேசம் மாநிலம் யமுனா அதிவிரைவுச் சாலையில் இன்று சென்று கொண்டிருந்தனர். மதுரா அருகே காரானது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து மதுரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...