வறுமையை நோக்கி இந்தியா - சோனியா காந்தி கவலை!

மார்ச் 18, 2018 510

புதுடெல்லி (18 மார்ச் 2018): மோடியின் ஆட்சியில் இந்தியா வறுமையை நோக்கி செல்வதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் என பலப் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் சோனியா காந்தி பேசும் போது, "மோடி ஆட்சிக்கு வரும் முன் கூறிய எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அனைவரும் ஒன்றிணைவோம், ஊழலற்ற ஆட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்றெல்லாம் தனது பேச்சு தந்திரத்தால் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விட்டார், ஆனால் மக்கள் தற்போது அவரது தந்திரத்தை மிகவும் நன்றாக புரிந்துகொண்டு விட்டனர்.

மன்மோகன் சிங் தலைமையினாக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியில் இருந்தது ஆனால் மோடி அரசின் ஆட்சியினால் நாடு வறுமையை நோக்கி சென்றுக்கொண்டிருகிறது. ஆட்சியை கைப்பற்றுவதற்கும், அதை தக்கவைத்துக் கொள்வதற்கும் மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது. இதைப் போன்ற சுயநல ஆட்சியை காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது அதனால் தான் மோடி அரசின் ஊழல்களை காங்கிரஸ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும், எப்போதும் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் ஒரு எழுச்சியை காங்கிரஸ் ஏற்படுத்தியது.அதே போன்ற ஒரு எழுச்சியை மீண்டும் நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அது காங்கிரஸின் வெற்றியாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த நாட்டில் வெற்றியாக இருக்கும்" இவ்வாறு பேசினார்.

சமீபத்தில் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் முதல் மநாடு இதுவாகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...