முத்தலாக் தடை சட்டத்தை முதலில் எதிர்த்தவர்கள் நாங்கள்: சந்திர பாபு நாயுடு!

March 20, 2018

ஐதராபாத் (20 மார்ச் 2018): முத்தலாக் தடை சட்ட மசோதவுக்கு எதிராக குரல் கொடுத்த கட்சி தெலுங்கு தேசம் என்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் முஸ்லிம் தலைவர்களுடன் உரையாடிய சந்திரபாபு நாயுடு, முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சலுகைகள் அளிக்கப் படும் என்றார். மேலும் முஸ்லிம்களுக்காக வாதாட அரசு சார்பில் நல்ல வழக்கறிஞரை நியமிப்பதாகவும் சந்திர பாபு நாயுடு உறுதி அளித்தார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையில் இடமளித்ததன் நோக்கமே ஆந்திராவுக்கு மத்திய அரசின் உதவிகளை பெறுவதற்காகத்தான். ஆனால் மத்திய அரசு ஆந்திராவை ஏமாற்றி விட்டது. என்றார்.

பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதுடன், அமைச்சரவையில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.

Search!