அலீமுத்தீன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை!

மார்ச் 21, 2018 868

ராஞ்சி (21 மார்ச் 2018): மாட்டுக் கறி வைத்திருந்ததாக அலீமுத்தீன் என்பவரை கொலை செய்த வழக்கில் பசு பயங்கரவாத கும்பல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராம்கார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி, அலீமுத்தின் அன்சாரி என்பவர் அவரது வேனில் மாட்டுக் கறி ஏற்றிச் சென்றதாகக் கூறி பசு பயங்கரவாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. போதிய ஆதாரங்கள் இருந்தும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்ட போதும் அவர்களுக்கு தண்டனை வழங்கப் படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர்கள் மீது கொலை, மற்றும் கொலைக்கான திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இந்நிலையில் இந்த படுகொலையில் தொடர்புடைய பாஜக தலைவர் உள்ளிட்ட 11 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...