டார்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சை செய்த பெண் மரணம்!

மார்ச் 22, 2018 538

பாட்னா (22 மார்ச் 2018): பிகாரில் அரசு மருத்துவமனை ஒன்றில் டார்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி பிகார் ஷார்சா மாவட்டத்தில் ரூபி தேவி (45) என்ற ஆசிரியையும் அவரது கணவர் ஷரனும் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது காவல்துறை வாகனம் மோதியதில் ஷரன் சம்பவ இடத்திலேயே உயிரிழதார். ரூபி தேவி படுகாயத்துடன் அருகில் உள்ள சதார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப் பட்டது. அப்போது ஒரு பெண் டார்ச் லைட்டை பிடித்துக் கொள்ள மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார்.
அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இந்நிலையில் ரூபி தேவி வியாழனன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...