ஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்க்க எளிய வழி!

மார்ச் 23, 2018 532

புதுடெல்லி (23 மார்ச் 2018): ஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது குறித்த எளிய வழிமுறையை இது காட்டுகிறது.

ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தவறை ஒப்புக் கொண்டு அதிர்ச்சி அளித்தார். அதன்படி ஒவ்வொரு பயனர் குறித்து ஃபேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் என்ன என்பதை நம்மால் சரிபார்க்க முடியும்.

இவற்றை இரண்டு அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். முதலில், உங்களுக்கு வழங்கப்படும் விளபம்ரங்களுக்காக ஃபேஸ்புக் வைத்திருக்கும் தகவல்கள். இரண்டாவதாக நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோடு செய்த புகைப்படங்கள், அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் கிளிக் செய்தவை அடங்கும்.

விளபம்ரம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?

- முதலில் ஃபேஸ்புக் லாக் இன் செய்ய வேண்டும்

- அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்

- இனி ஆட்ஸ் (விளம்பரங்கள்) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- இங்கு நீங்கள் விரும்புவதாக ஃபேஸ்புக்கிடம் பதிவிட்ட முழு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இத்துடன் நீங்கள் பின்தொடரும் ஃபேஸ்புக் பேஜ், ஆப்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.

- இதன் கீழ் ஸ்கிரால் செய்யும் போது ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களின் தகவல்களை பார்க்க முடியும்.

- இதில் நீங்கள் கடைசியாக பயணம் செய்த இடம், ஃபேஸ்புக் பயன்படுத்த நீங்கள் உபயோகிக்கும் சாதனம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கும்.

- உங்களது தகவல்களில் பிழை இருந்தாலோ அல்லது தவறாக பதிவிடப்பட்டு இருந்தாலோ அவற்றை அழிக்க ஃபேஸ்புக் அனுமதிக்கிறது. இவ்வாறான தகவல்கள் ஃபேஸ்புக்கில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...