பாஜக எம்பியின் அமைப்பு வழங்கிய விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி!

மார்ச் 26, 2018 769

பெங்களூரு (26 மார்ச் 2018): பாஜக எம்பி யின் அமைப்பு வழங்கிய விருதை ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஏற்க மறுத்துவிட்டார்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா மிகவும் நேர்மைக்கு பெயர் பெற்றவர். கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹார சிறையின் டிஐஜியாக இருந்த இவர் கடந்த ஆண்டு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் குறித்தும் இதற்காக உயரதிகாரி சத்யநாராயணா அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதும் குறித்தும் ரூபா ஆதாரத்துடன் வெளியே கொண்டு வந்தார்.

துறை ரீதியான நடவடிக்கைக்கும் அவர் தயார் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் சிறைத்துறையிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றப்பட்டார்.

பாஜக எம்.பி நடத்து அறக்கட்டளையான நம்ம பெங்களூர் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதையும் ரொக்க பரிசையும் வழங்கி வருகிறது. இந்த அமைப்பை பாஜக எம்பியான ராஜீவ் சந்திரசேகர் நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு இவ்வருடம் வழங்க இருக்கும் அரசு அதிகாரிக்கான சிறப்பு விருதுகளுக்கு 8 அரசு அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுள் ரூபாவும் ஒருவர். ஆனால் பாஜக எம்பி நடத்தும் அமைப்பு வழங்கும் விருதை ஏற்க முடியாது என்று ரூபா மறுத்துவிட்டார்.

மேலும் இதுகுறித்து அந்த அமைப்புக்கு ரூபா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், "நான் அரசியல் அமைப்புகளிடம் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா சமீபத்தில் TEDx நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். காவல்துறையினரின் நேர்மையை பறைசாற்றும்  உரை இது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...