கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை - சர்வே முடிவு!

மார்ச் 26, 2018 885

பெங்களூரு (26 மார்ச் 2018): வரும் சட்ட மன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று சி-ஃபோர் அமைப்பு வெளியிட்டுள்ள சர்வே முடிவு தெரிவிக்கிறது.

224 சட்டசபை தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடகாவில் பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என பாஜக எதிர் பார்க்கிறது.

இந்நிலையில் சி-ஃபோர் அமைப்பு, மார்ச் 1 முதல் 25ம் தேதி வரையில் 154 தொகுதிகளில் சர்வே நிகழ்ந்துள்ளது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதன் படி காங்கிரஸ் கட்சி கூடுதலாக 9 சதவிகித வாக்குகளைப் பெற்று 46 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று சொல்லியுள்ளது. அதே நேரத்தில் 31 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் மஜத 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறும் என்று சர்வே சொல்கிறது.

காங்கிரஸ் கட்சி 126 இடங்களையும், பிஜேபி 70 தொகுதிகளைப் பெறும் என்றும், மஜத 27 தொகுதிகளை வெல்லும் எனவும் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...