ராம் நவமி பேரணியில் மோதல் - ஒருவர் பலி!

மார்ச் 27, 2018 581

கொல்கத்தா (27 மார்ச் 2018) மேற்கு வங்கத்தில் கொண்டாடப் படும் ராம் நவமி விழா பேரணியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப் பட்டுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று ராம் நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக ஒவ்வொரு தரப்பினரும் விதவிதமான யாத்திரைகளை மேற்கொண்டனர். அதில் புருலியா மாவட்டத்தில் உள்ள பேல்டி கிராமத்தில் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த யாத்திரையின் போது இந்துத்வ அமைப்புகள் பல ஆயுதங்கள் ஏந்தியபடி பேரணி நடத்தினர். குறிப்பாக ராம் மந்திர் மகோத்சவ் சமிதி என்ற அமைப்பு இந்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த கலவரம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "ராமர் ஊர்வலங்களில் ஆயுதங்கள் ஏந்தி வர சொன்னாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் . நான் அமைதியான பேரணிக்குத்தான் அனுமதி தந்தேன். வீட்டிலுள்ள துப்பாக்கி, வாளை எடுத்து வந்து, அப்பாவிகளை ராமரின் பெயரால் கொல்ல அனுமதி தரவில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...