கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

மார்ச் 27, 2018 576

புதுடெல்லி (27 மார்ச் 2018): கர்நாடகா சட்டப் பேரவைக்கு மே 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக ஆட்சி நடத்திவருகிறார். இந்நிலையில், வரும் மே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர் பார்க்கப் பட்டது.

அதன்படி 224 தொகுதிகளிலும் வரும் மே 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...