முத்தலாக்கை அடுத்து முஸ்லிம்களை குறி வைக்கும் வழக்கு!

மார்ச் 27, 2018 755

புதுடெல்லி (27 மார்ச் 2018): பலதார மணத்திற்கு தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில் பலதார மணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பலதார மணம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், பாலியல் பலாத்காரத்திற்கு சமமானது என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, சந்திராசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 நபர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என தெரிவித்தனர்.

மேலும், முஸ்லீம்களின் பலதார மணம் மற்றும், விவகாரத்து முறை ஆகியவற்றுக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து மத்திய சட்ட ஆணையமும் மத்திய அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...