விமான டயர் வெடித்து விபத்து - நடிகை உட்பட பயணிகள் உயிர் தப்பினர்!

March 29, 2018

ஐதராபாத் (29 மார்ச் 2018): ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிரங்கும் போது டயர் வெடித்தது இதில் நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

திருப்பதியில் இருந்து இண்டிகோ - 6E 7117 விமானம் இரவு 10.25 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் ஒரு டயர் திடீரென வெடித்தது. இதனால், டயர் வெடித்த இடத்தில் இருந்து நெருப்பு வெளியேறியது இதையடுத்து பயணிகள் பதற்றமடைந்தனர். ஆயினும் விமான நிலையத்திற்கு அவசர தகவல் அனுப்பப்பட்டு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நெருப்பை அணைத்து, அனைத்து பயணிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக கீழே இறக்கினர்.

இதனால் விமானத்தில் இருந்த நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் உயிர்தப்பினர். விபத்து காரணமாக ஓடுதளம் மூடப்பட்டதையடுத்து 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!