நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி!

ஏப்ரல் 01, 2018 476

இந்தூர் (01 ஏப் 2018): மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாக பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தூரில், சர்வதே பஸ் ஸ்டாண்ட் அருகே நான்கு மாடி கட்டடத்தில் ஓட்டல் இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளிலிருந்து இதுவரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிட இடிபாடுகளிடையே மேலும் பலர் சிக்கிக்கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடம் மீது வாகனம் ஒன்று மோதியதே கட்டிடம் இடிந்து விழ காரணம் என்று கூறப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...