மத்திய அரசைக் கண்டித்து 24 மணி நேர பந்த்!

ஏப்ரல் 02, 2018 621

திருவனந்தபுரம் (02 ஏப் 2018): கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழில் சங்கங்கள் சார்பில் 24 மணி நேர பந்து நடைபெற்று வருகிறது.

தொழிலாளர் நலச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, புதிய வடிவிலான தொழிலாளர் நலச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம், தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்திருப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், கேரளாவில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில், இன்று 24 மணி நேர வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்குத் துவங்கிய இந்தப் போராட்டம், இன்று நள்ளிரவு 12 மணிவரை நடக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...