உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை கர்நாடகம் நிறைவேற்றும்: சித்தராமையா!

ஏப்ரல் 02, 2018 518

மைசூர் (02 ஏப் 2018): காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை கர்நாடகம் நிறைவேற்றும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுகுறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி பிரச்சினையில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வதில் மட்டும் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் செயல்படும். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி பிரச்சினைக்காக வருகிற 5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த சில கட்சிகள் திட்டமிட்டு அழைப்பு விடுத்து வருகின்றன. இது தமிழ்நாட்டின் உள்விவகாரம். இதில் கர்நாடகம் செவிசாய்க்க ஒன்றும் இல்லை.

குறிப்பாக தி.மு.க. தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும், காவிரி மேற்பார்வை குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாட்டில் முழுஅடைப்பு போராட்டம் நடக்கும் என்று தெரிகிறது. தமிழ்நாடு அரசு காவிரி பிரச்சினையில் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது அவர்களின் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு காவிரி நதிநீரை கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் எந்த அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று வரையறை வகுத்து இறுதி தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு யாரும் வழக்கு தொடர முடியாது.” இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...