கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காயம்!

ஏப்ரல் 03, 2018 553

பெங்களூரு (03 ஏப் 2018): கர்நாடக முதல்வர் சித்தராமையா தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி சட்ட சபை தேர்தல் நடை பெறுகிறது. அங்கு முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் 4 நாட்கள் பிரசாரம் செய்தார். நேற்று மாவின்ஹள்ளி பகுதியில் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டில் உணவு சாப்பிட பிளாஸ்டிக் நாற்காலியில் அவர் அமர்ந்தார். அப்போது அந்த பிளாஸ்டிக் நாற்காலி உடைந்தது. சித்தராமையாவும் நாற்காலியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பிளாஸ்டிக் நாற்காலியின் கைப்பிடி அவரது தலையில் குத்தி ரத்தக் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் கட்டு போடப்பட்டது. பின்பு அவர் பெங்களூருக்கு அழைதுச் செல்லப் பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...