பத்திரிகையாளர் அங்கீகாரம் பெறும் விதிமுறைகளை திரும்ப பெற்றது மத்திய அரசு!

ஏப்ரல் 03, 2018 562

புதுடெல்லி (03 ஏப் 2018): பத்திரிகையாளர் அங்கீகாரம் பெறும் வழிமுறைகளுக்கான அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

போலி செய்திகள் அதிகரிப்பதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து அதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிய அறிக்கை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, போலி செய்தி குறித்த சோதனை 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். அதுவரை சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் அங்கீகார அட்டை தருவது நிறுத்தி வைக்கப்படும். போலி செய்தி ஒளிபரப்பியது உறுதி செய்யப்பட்டால், முதல்முறை, 6 மாதமும், இரண்டாம் முறை ஒரு வருடத்திற்கும், மூன்றாவது முறை நிரந்தரமாகவும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஹ்மது பட்டேல் மத்திய அரசின் அறிக்கையை பாரட்டிய அதேவேளை நேர்மையான நிருபர்களைத் துன்புறுத்துவதற்கு இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதற்கு உத்தரவாதம் என்ன? யார் போலி செய்தி என்னவென்று தீர்மானிப்பவர்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் முந்தைய அறிக்கையை திரும்பப் பெறுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...