பாஜக மீது பிரவீன் தொகாடியா குற்றச்சாட்டு!

ஏப்ரல் 03, 2018 802

புதுடெல்லி (03 ஏப் 2018): ராமர் பெயரை சொல்லி மக்களை பாஜக ஏமாற்றுகிறது என்று, என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "ராமர் பெயரை சொல்லி பா.ஜ.க. மக்களை ஏமாற்றி விட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ. அரசு ஒரு முன்னேற்றமும் புரியவில்லை. 20 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். பா.ஜ. ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நான் மோடியிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

மத்தியில் ஆளும் மோடி அரசும், உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் யோகி அரசும் ராமர் கோவில் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியால் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இப்போது அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக கதை சொல்கிறார்கள்." என்று அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...