ஜாதி வெறியர்கள் அட்டூழியம்: தலித் வீடுகளுக்கு தீ வைப்பு!

ஏப்ரல் 04, 2018 830

ஜெய்ப்பூர் (04 ஏப் 2018): ராஜஸ்தானில் மேல் ஜாதியினர் சுமார் 5000 பேர் தலித் வீடுகள் மற்றும் தலித் எம்.எல்.ஏ, அமைச்சர் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உடனடி கைது நடவடிக்கை கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது வட இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது, இதற்கு தலித் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்திற்கு மேல் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது வன்முறையாக மாறியது. இதனால் வட மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் வன்முறையை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர். இதனிடையே ராஜஸ்தானில் ஆதிக்க ஜாதியினர் 5,000 பேர் பாஜகவின் தற்போதைய தலித் எம்.எல்.ஏ. ராஜ்குமார் யாதவ், முன்னாள் அமைச்சர் பெரொசிலால் யாதவ் ஆகியோர் வீடுகளை சூறையாடி தீக்கிரையாக்கினர். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...