காலியான நாற்காலிகளை பார்த்து பேசிய அமித்ஷா!

ஏப்ரல் 04, 2018 1217

பெங்களூரு (04 ஏப் 2018): கர்நாடகாவில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேராததால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.

கர்நாடகவில் பா.ஜனதா சார்பில் ஹாவேரி மாவட்டம் காகினெலே என்ற இடத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். ஆனால் இந்த கூட்டத்திற்கு மக்கள் சரிவர வரவில்லை. வந்த சிலரும் திரும்பி சென்றனர். நாற்காலிகள் காலியாக இருந்தன. மாநாட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் செல்பவர்களை இருக்கையில் அமர வைக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தினார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் அமித்ஷா கடும் அதிருப்தி அடைந்தார்.

எனினும் அமித்ஷா காங்கிரஸை சாடி பேசிவிட்டு அங்கிருந்து அதிருப்தியுடன் சென்றார். கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு சரியான ஆதரவு இல்லாமல் இருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...