ஐந்து சாமியார்களுக்கு அமைச்சர்கள் அந்தஸ்த்து!

ஏப்ரல் 04, 2018 539

போபால் (04 ஏப் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து சாமியார்களுக்கு அமைச்சர்கள் அந்தஸ்த்து வழங்கப் பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்குள்ள 5 சாமியார்களுக்கு மந்திரி பதவி அந்தஸ்து கொடுத்து சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். நர்மதா நதியை பாதுகாப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த 5 சாமியார்களும் உதவி செய்வார்கள். எனவே அவர்களுக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கம்ப்யூட்டர் பாபா, யோகேந்திர மகந்த், நர்மதானந்தா, ஹரிகரானந்தா, பாபாயுமகராஜ் ஆகிய 5 சாமியார்களை மந்திரி அந்தஸ்து பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு மந்திரிகளுக்குரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சாமியார்களுக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...