தவறான தகவல் தருவதில் மன்னன் பிரதமர் மோடி: ராகுல் கிண்டல்!

April 05, 2018

புதுடெல்லி (05 ஏப் 2018): தவறான தகவல் தருவதில் பிரதமர் மோடி மன்னன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ‘‘மற்ற நாடுகளை பற்றி எப்போதும் முன்னுதாரணமாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை விஷயத்தில் மற்ற நாடுகளை பின்பற்றுவதில்லையே? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் வெளிநாடுகளை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘‘தவறான தகவல் மன்னன் நமது பிரதமர்" என குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசுகிறார். அதில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறுகிறார்.

அதனை கேட்டு இந்தி நடிகர் சல்மான் கான் சிரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!